ஜனாதிபதி தேர்தல் கடமையில் அதிகபட்ச பொலிசார் கடமை

ஜனாதிபதி தேர்தலிற்கான, தேர்தல் சட்டங்கள் ஆகக் கூடிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பாக தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும் ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60ஆயிரம் பொலிசாரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குக் கூடுதலாக இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் நாலாயிரம் பேரை உயர்மட்டப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் ஆடுகளமாகியுள்ள சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் பெருமளவில் வன்முறைகள் இடம்பெற்றுவருவதால் தற்போது அதிக காவல்துறையினரை பணியில் அமர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.