விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்.

விண்வெளியில் நடந்த முதல் மனிதரான ரஷ்யாவின் அலெக்சி லியோனொவ், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று(11) காலமானார்.

ரஷ்யாவின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரரும், ரஷ்ய வான்படையின் ஜெனரலாகவும் இருந்த அலெக்சி லியோனொவ், 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி விண்வெளி பயணத்தின் போது, விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து 12 நிமிடங்கள் இருந்தார். இதன் மூலம், விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். சில நாட்களகாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைகளை பெற்று வந்த லியோனொவ், மாஸ்கோவில் நேற்று காலமானார்.

லியோனொவ் மறைவிற்கு இந்தியாவின் இஸ்ரோ அமைப்பும், நாசாவும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.