இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு உதவுவதாக சீனா உறுதி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு உதவுவதற்கு சீனாவின் அர்ப்பணிப்பை சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வழமையான செய்தியாளர் மாநாட்டில் வாங் வென்பின் கூறியதாவது:

“நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் கூட்டாக பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு விடுக்கிறது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

நாங்கள் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதோடு, கடனைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து இலங்கையுடன் தீவிரமாக விவாதிப்பதில் சீன நிதி நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளோம் என்றார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.