80 கட்சிகள் புதிதாக பதிவுக்காக விண்ணப்பம்; 40 நிராகரிப்பு! ஏனையவை பரிசீலனையில்

2020 ஆண்டுக்கான அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்காக 150 கட்சிகள் விண்ணப்பித்துள்ளன.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்கப்பட்டுள்ள 150 கட்சிகளில் 70 கட்சிகள் ஏற்கனவே உள்ளவை என அவர் குறிப்பிட்டுள்ளார். 80 புதிய விண்ணப்பங்கள்.

அத்துடன், விண்ணப்பித்துள்ள கட்சிகளில் 40 விண்ணப்பங்கள் அடிப்படை ஆவணங்களைக் கூடப் பூர்த்தி செய்யாமையால் நிராகரிக்கப்பட் டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

விண்ணப்பித்துள்ள கட்சிகளால் ஒப்படைக் கப்பட்டுள்ள ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன எனவும் விரைவில் நேர்முகத்தேர்வைநடத்தி கட்சிகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் விவரங்களை ஆணைக்குழு வெளியிடும் எனவும் நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.