சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 8 பேர் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 08 பேர் தலைமன்னார் – பேசாலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு(13) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட 3 இளைஞர்களும் 2 பெண்களும் 18 வயதுக்கும் குறைந்த 3 சிறுவர்களுமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொறவெவ, வவுனியா, யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.