அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிக்க IMF அவதானம்

சர்வதேச நாணய நிதியம் தமது அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் அவதானம் செலுத்தியுள்ளது.

பல உலக நாடுகள் எதிர்நோக்கும் உணவு நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

அதன்படி தற்போது 20 – 30 நாடுகளுக்கு வழங்கப்படும் அவசர உதவி அதிகரிக்கப்படவுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் நிலவரத்தால், உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அவசர உதவிகளை அதிகரிப்பதற்கான யோசனை சர்வதேச நாணய நிதியத்தினால் ஏற்கனவே செயற்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி எதிர்வரும் சில தினங்களில் கிடைக்கப்பெறும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.