கர்தார்பூர்: இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்து 75 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த சகோதரர்களின் கண்ணீர் கதை

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்

எனக்கு விசா கொடுக்கும்படி இம்ரான் கானிடம் சொல்லுங்கள். எனக்கு இந்தியாவில் யாரும் இல்லை.” “நீ பாகிஸ்தானுக்கு வா, நான் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்.” சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக சந்தித்த இரு சகோதரர்களின் உரையாடலின் ஒரு பகுதி இது.

முகமது சித்திக்கி மற்றும் முகமது ஹபீப் ஆகியோரின் இந்த தனித்துவமான சந்திப்பானது, கோடிக்கணக்கான மக்களின் கண்கள் பல ஆண்டுகளாகக்காணும் கனவாகும். நாட்டின் சுதந்திரத்துடன் வந்த பிரிவினை இவர்களுக்கு வெறும் கதைமட்டும் அல்ல.

இந்த இரு சகோதர்களும் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்தனர். பெரும் குழப்பத்திற்கு இடையே இவர்களது குடும்பம் ஜலந்தரில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்றது. அவரது தந்தை இறந்துவிட்டார். சித்திக்கி தனது சகோதரியுடன் பாகிஸ்தானை அடைந்தார். ஹபீப் தனது தாயுடன் இங்கு தங்கினார். தாய் பின்னர் காலமானார்.

Tamil News