மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 68 கொரோனா தொற்றாளர்கள்

223 Views

IMG 1692 1 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 68 கொரோனா தொற்றாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 68 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 68 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளனர். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 22பேரும், செங்கலடி வைத்திய அதிகாரிகள் பிரிவில் 11பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 10பேர் உட்பட 68பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8275 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளதுடன் 116பேர் உயிரிழந்துள்ளதுடன் இறப்புகளில் 69வீதமான இறப்பானது 60வயதுக்கும் மேற்பட்டவர்களாகவுள்ளனர்.

மூன்றாவது அலை காரணமாக 7292 பேர் தொற்றாளர்களாக இனங்காணப் பட்டுள்ளதுடன் 107 மரணங்களும் ஏற்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply