மட்டக்களப்பு: உணவு ஒவ்வாமையால் வீரநகர் பாடசாலை மாணவர்கள் 64 பேர் பாதிப்பு

மாணவர்கள் 64 பேர் பாதிப்பு

வீரநகர் பாடசாலை மாணவர்கள் 64 பேர் பாதிப்பு

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவு ஒவ்வாமையால் மட்டக்களப்பு – வீரநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் 64 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை – வீரநகர் பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவர்களுக்கு இன்று மதியம் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவர் உட்பட ஒன்பது மாணவர்கள் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இன்று மதியம் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் பாடசாலையில் இருந்து வீடுகளுக்கு சென்ற சில மாணவர்களுக்கும் ஒவ்வா நிலை ஏற்பட்டமையை அடுத்து அவர்களும் பெற்றோர்களால் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.