சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 64 பேர் கடற்படையால் கைது

95 Views

வெளிநாடு செல்ல முயன்ற 64 பேர் கைது

இலங்கை கடற்படையினர் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில்  வைத்து  சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேரை கைது செய்துள்ளனர்.

வெளிநாடு செல்ல பயன்படுத்த இருந்த மீன்பிடி இழுவை படகையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 03 குழந்தைகள் உள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Tamil News

Leave a Reply