யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றால் மரணம்!

231 Views

யாழ்ப்பாணத்தில் 6 பேர் கொரோனா தொற்றால் மரணம்யாழ்ப்பாணத்தில் 6 பேர் கொரோனா தொற்றால் மரணம்: யாழ். மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் வேம்படியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும் அரியாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தென்மராட்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மீசாலை மேற்கைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கொவிட்-19 தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317ஆக உயர்வடைந்துள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply