லிபியா கடற்பரப்பில் ஏதிலிகள் படகு கவிழ்ந்து விபத்து -57 பேர் பலி

192 Views

5fae28bdd3806c017cc4c5fd லிபியா கடற்பரப்பில் ஏதிலிகள் படகு கவிழ்ந்து விபத்து -57 பேர் பலி

லிபியாவில் ஏதிலிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் இரு குழந்தைகள் 20 பெண்கள் உட்பட 57 பேர் உயிரிழந்ததாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு கடற்கரை நகரமான கும்ஸில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஏதிலிகளுடன் புறப்பட்ட படகே  விபத்தில் சிக்கியதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சஃபா மெஸ்லி தெரிவித்தார்.

இந்தப் படகில் குறைந்தது 75 பேர் இருந்தனர் என்றும் இவா்களில் நைஜீரியா, கானா மற்றும் காம்பியா நாடுகளைச் சேர்ந்த 18 அகதிகள் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் படகுகளில் செல்லும்போது மத்தியதரைக் கடலில் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply