இலங்கையில் சுமார் 57 இலட்சம் பேருக்கு போதுமான ஒரு வேலை உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் மனிதாபிமான உணவு அவசியத்தின் பின்னணியில் இருந்து வருவதாகவும் உணவுத்திட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டுள்ள இலங்கையில் கடந்த 70 வருடங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள கஷ்டங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் உலக உணவுத்திட்டம் கூறியுள்ளது.
அதேவேளை பொருளாதார சிரமங்கள் கரணமாக தமது அன்றாட வாழ்க்கையில் உணவு தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத மிகவும் கஷ்ட நிலைமையை எதிர்நோக்கியுள்ள பல குடும்பங்கள் சம்பந்தமாக தற்போது ஊடங்களில் பரவாக செய்திகளை வெளியாகி வருவதை காண முடிகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.