விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (21) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், நீர்கொழும்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 47 சீனர்களும், 02 மலேசியா நாட்டை சேரந்தவர்களும், ஒரு இந்தியரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வணிக விசாவில் நாட்டிற்குள் நுழைந்து, அதன் காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் தற்போது வெலிசறை தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



