உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தார்மீக ஆதரவை வழங்குவதோடு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்” என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்றையதினம்(21)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.



