கடந்த வருடத்தில் 45 ஊடகவியலாளர்கள் பலி

45 ஊடகவியலாளர்கள் பலி

கடந்த வருடத்திலேயே மிகவும் குறைந்த அளவு ஊடகவியலாளர்கள் உலகில் கொல்லப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கடந்த வெள்ளிக்கிழமை (31) வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு 45 ஊடகவியலாளர்கள் பலியாகிள்ளனர். ஆப்கானில் 9 ஊடகவியலாளர்களும், மெக்சிகோவில் 8 பேரும், இந்தியாவில் 4 பேரும், பாகிஸ்தானில் 3 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த வருடம் 46 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 1995 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிகவும் குறைந்தளவில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது கடந்த வருடம் தான் எனவும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 20 பேரும், அமெரிக்க பிராந்திய நாடுகளில் 10 பேரும், ஆபிரிக்காவில் 8 பேரும், ஐரோப்பாவில் 6பேரும், மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த வருடமே அதிகளவான ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. 293 ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

Tamil News