விடுமுறையில் செல்ல அனுமதிக்க மறுத்ததால் சுட்டேன்- 4 பேரை கொலை செய்த காவல்துறை உறுப்பினர் தகவல்

அனுமதிக்க மறுத்ததால் சுட்டேன்

தான் விடுமுறையில் வீடு செல்ல திருக்கோவில்  காவல் நிலைய பொறுப்பதிகாரி அனுமதிக்க மறுத்ததால் சுட்டேன் என 4 காவல்துறை உறுப்பினர்களை சுட்டுக் கொலை செய்த  ரவீந்து குமார என்ற காவல்துறை உத்தியோகத்தர் விசாரணையில்  தெரிவித்துள்ளார்.

கடந்த 24 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு  அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்  காவல் நிலையத்தில் கடமையாற்றும்  காவல்துறை உறுப்பினர், காவல்துறை உறுப்பினர்கள்  மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம்  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.