40,000 மெட்ரிக் தொன் டீசல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளது

263 Views

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த ஏற்றுமதி இலங்கைக்கு வருவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரான சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான எஸ்.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply