40,000 பேர் எதிர்பார்க்கப்பட்டனர் 25 பேரே வந்தனர்;ட்ரம்ப் அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் பிர்ச்சாரத்துக்கு தயாரானார், நம் ஊர்களில் கூறுவது போல் ‘அலைகடலென, கடல் அலையென’ திரண்டு வாரீர் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் பிரச்சாரம் பிசுபிசுத்துப் போனது , காரணம் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. இதனால் ட்ரம்ப் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கொரோனா ரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் தோல்வி, இனவெறிப் பிரச்சினை, போராட்டங்கள், கடும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை ட்ரம்பின் செல்வாக்கைக் குறைத்து கருத்துக் கணிப்புகளும் ஜனநாயக வேட்பாளர் பிடனுக்கு ஆதரவாகவே வெளிவந்துள்ளன.

இருப்பினும் தன் பிரச்சாரத்தைக் கேட்க அலைகடலென திரண்டிருப்பார்களென்று எதிர்பார்த்தா ர்ட்ரம்ப். 40,000 பேர் வரை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.ஆனால் 25 பேர்தான் இருந்தனர்.

தனக்கு ஆதரவு குறைவதாக கருதும் ட்ரம்ப் கடும் கோபத்திலும் அதிர்ச்சியிலும் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.