காசா மீது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் இதுவரையில் 399 இற்கு மேற்பட்ட உதவிப பணியாளர்கள் கொல்லப்பட்டுள் ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் முடிவடைந்த பின்னர் இஸ்ரேல் தான்தோன்றித் தனமாக ஆரம்பித்துள்ள தாக்குதல்களினால் கடந்த 18 ஆம் நாளில் இருந்து 23 ஆம் நாள் வரையிலும் 142,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் 792 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1633 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்தல்களி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் இந்த தாக்குதல்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதுடன், உதவிப் பணிகளை இஸ்ரேல் தொடர்ந்தும் தடுத்து வருகின்றது என ஐ.நா தனது அறிக்கையில் மேலும் தெரிவித் துள்ளது.
அதேசமயம், லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது, இஸ்ரேலின் தாக்குதல்களை தொடர்ந்து லெபனான் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.