ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்ற 37 இலங்கையர்கள் கைது

183 Views

இலங்கையர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டவர்கள், ரொமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்குடன் தப்பிச்செல்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருட்களை ஏற்றிச்சென்ற மூன்று பாரவூர்திகளில் மறைந்து பயணித்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 70 பேரில் 37 இலங்கையர்கள்  எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவர்கள், இலங்கையின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply