93 Views
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு கடல்வழியாக வெளியேற முயன்ற 33 பேர் நீர்கொழும்பு கடற்படையினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையடுத்து இவ்வாறு நாட்டை விட்டு கடல் மார்க்கமாக வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.