புங்குடுதீவில் அமுல் படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் நீக்கம்

புங்குடுதீவில் அமுல் படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மேலும் கூறுகையில்.

“கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப் பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என சுகாதாரப் பகுதியினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புங்குடுதீவு பகுதியானது இன்று காலையிலிருந்து தற்காலிக முடக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இன்றிலிருந்து புங்குடுதீவு பிரதேசம் வழமைக்குத் திரும்பும்.

எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அப்பகுதிக்கு சென்று வரும் பொது மக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறித்த பகுதியியானது சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்”  என்றார்.