ஏமனின் ஹத்ரமௌத் மற்றும் மரிப் மாகாணங்களில் உள்ள அரசு இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 30 அரசுப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் அல் ஜசீராவிடம் தெரிவித்தன.
ஏமனின் அவசரக்காலப் படைகளால் (Emergency Forces) நிர்வகிக்கப்படும் முகாம்கள் உட்பட இராணுவத் தளங்கள் மீது வியாழக்கிழமை(6) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், நாட்டின் உள்நாட்டுப் போரில் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதல்களாகும். சமீபத்திய வாரங்களில் ஏமனில் அதிகரித்துள்ள வன்முறையைத் தொடர்ந்து இத்தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இத்தாக்குதல்களால் “நூற்றுக்கணக்கானோர்” உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ நேரிட்டதாக ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ தெரிவித்தார். ஹூதிகளுக்கு எதிராகத் தாங்கள் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி, ஏமன் இராணுவம் இத்தாக்குதல்களை உறுதிப்படுத்தியது.
ஹத்ரமௌத்தில் உள்ள அல்-தினியா மற்றும் அல்-அப்ர், மற்றும் மரிப்பில் உள்ள அல்-ரூக் ஆகிய இடங்களை இலக்காகக் கொண்டு, மரிப்பிற்கு வடக்கே உள்ள அல்-ஜவ்ஃப் மாகாணத்திலிருந்து ஹூதிகள் எட்டு ஏவுகணைகளை ஏவியதாக ஏமன் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. உயிரிழந்தோர் மற்றும் காயம டைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு (11:00 GMT) இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஜசீராவின் ஏமன் விவகாரங்களுக்கான ஆசிரியர் அகமது அல்-ஷலாஃபி தெரிவித்தார். இதில் அரசு இராணுவப் பிரிவுகள், ‘ஹோம்லேண்ட் ஷீல்ட் ஃபோர்சஸ்’ (Homeland Shield Forces), அவசரக்காலப் படைகள் மற்றும் ஹத்ர மௌத்தில் உள்ள முதல் இராணுவப் பிரிவு ஆகியவற் றின் முகாம்கள் தாக்கப்பட்டன.
சவூதி ஆதரவுடன் 2022ல் உருவாக்கப்பட்ட, பல்லாயிரக்கணக்கான வீரர்க ளைக் கொண்ட ‘ஹோம்லேண்ட் ஷீல்ட் ஃபோர்சஸ்’ படைப் பிரிவு, மரிப்-ஹத்ரமௌத் எல்லைப் பகுதியையும் சவூதி எல்லையையும் பாதுகாக்கிறது. இப்பிரிவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘தெற்கு இடைக்கால கவுன்சில்’ (Southern Transitional Council) படைகளுடன் மோதியது.



