2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் மக்களின் அடிப்படை மற்றும் அவசர தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் சில மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்தி, மக்கள் நலனுக்கான முக்கிய சேவைகள், மற்றும் தேவைகளை அடையாளம் காணும் பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, 2026 வரவு செலவுத் திட்டம் தயார் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



