2023 வரையில் கொரோனா நீடிக்கும்! 300 சிகிச்சை நிலையங்கள் தேவை – ரணில்

“பொதுமக்கள் வைரசினால் உயிரிழப்பதை தவிர்ப்பதற்காக அடுத்த சில வருடங்களிற்கு கொரோனா வைரஸ் திட்டம் அவசியம். கொரோனா வைரஸ் 2023 வரை நீடிக்கும்” என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டு மக்களை பாதுகாக்கவேண்டும் ஆனால் இதுவரை தங்களை பாதுகாப்பதிலேயே அரசாங்கம் ஆர்வமாக உள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்குவதற்காக 300 சிகிச்சை நிலையங்களை அமைக்கவேண்டும். மாற்றமடைந்த வைரஸ்கள் உருவாகக்கூடும் என்பதால் வைரசினை எதிர்கொள்வதற்கான அடிப்படைகளை உருவாக்கவேண்டும். இதன்காரணமாக அரசாங்கம் கொரோனா வைரஸ் குறித்து கவனம் செலுத்தவேண்டும், அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசியல் மயப்படுத்தவேண்டாம்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.