2ஆம் உலகப்போர் 75ஆம் ஆண்டு வெற்றி விழா: மொஸ்கோ அணிவகுப்பில் இந்திய இராணுவம் பங்கேற்பு

மொஸ்கோவில் நடைபெற்ற 2ஆவது உலகப் போரின் 75ஆவது ஆண்டு நிறைவு அணிவகுப்பில் இந்திய இராணுவ வீரர்களும் பங்கேற்றனர்.

1941 – 1945ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் 2ஆவது உலகப் போரில் வெற்றி கண்டது. இந்த வெற்றியின் 75ஆம் ஆண்டு விழாவை ரஷ்யா கொண்டாடுகின்றது.

மொஸ்கோ செஞ்சதுக்கத்தில் இன்று(24) நடைபெற்ற வெற்றி தின அணிவகுப்பில் இந்திய இராணுவ வீரர்கள் பங்கேற்றனர். இந்திய இராணுவத்தின் முப்படைப் பிரிவு, ரஷ்ய இராணுவப்படை மற்றும் 17 பிற நாடுகளின் படையினர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.