1983 கறுப்பு ஜூலைக் கலவரம் : உயிரிழந்தவர்களுக்கு யாழில் நினைவேந்தல்

95 Views

1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலொன்று இடம்பெற்றது.

வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில்  இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலில் எம்.ஏ.சுமந்திரன், ச.சுகிர்தன், கே.சயந்தன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

1983 ஜூலை 23 நடந்த கறுப்பு ஜூலைக் கலவரத்தின்போது தமிழர்கள் பலரும் கொல்லப்பட்டதுடன் சொத்துகளும் அழித்து நாசமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply