7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் நல்லதொரு முடிவை எடுப்பார்-தமிழக முதலமைச்சர்

171 Views

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வரம் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என பலதரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகையில், இன்று சட்ட சபையில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் நல்லதொரு முடிவை எடுப்பார் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக முதல்வர் குறிப்பிடும் போது, 7பேரின் விடுதலையை ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே இவர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்லதொரு முடிவை எடுப்பார் என்று கூறினார்.

மேலும், 7பேரின் விடுதலையில் அரசு மெத்தனமாக இருப்பதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் பேசியதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளிக்கையில், ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

Leave a Reply