மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் அனுஷ்டிப்பு

350 Views

மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள்

இந்தியாவின் தேசபிதா என அழைக்கப்படும்  மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் நிகழ்வு இன்று. இந்நிகழ்வை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பிலும் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நினைவு கூரப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் குறித்த நிகழ்வு கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

யாழிற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாண அவைத்தலைவர், யாழ் மாநகர முதல்வர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில்,   மகாத்மா காந்தியின் 153வது ஜனன தின நிகழ்வு மட்டக்களப்பில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் கதிர் பாரதிதாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply