அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வரும் திருடப்பட்ட 14 வரலாற்று சின்னங்கள்

304 Views

pjimage 1 17 அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வரும் திருடப்பட்ட 14 வரலாற்று சின்னங்கள்

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்களை அந்நாட்டிடமே திருப்பித்தரும் பட்சத்தில் “எங்கள் வரலாற்றின் மிக கடினமான ஓர் அத்தியாயம் முடிவடையும்” என அவுஸ்திரேலியாவின் நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தின் இயக்குநர் நிக் மிட்ஸ்வெச் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட அல்லது திருடப்பட்ட 14 கலைப் பொருட்களை அவுஸ்திரேலியா மீண்டும் ஒப்படைக்க உள்ளது .

இவற்றில் ஒரு கலைப் பொருளைத் தவிர மற்ற அனைத்தும், கலைப்பொருள் விற்பனையாளர் மற்றும் கடத்தல்காரர் என்று குற்றம் சாட்டப்படும் சுபாஷ் கபூர் என்பவருடன் தொடர்புடையவை.

மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த சிலைகள், புகைப்படங்கள் உள்ளிட்ட 2.2 மில்லியன் டொலர்கள் மதிப்பு கொண்ட, இந்தியாவுக்கு சொந்தமான கலைப் பொருட்கள் அவுஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்திடம் (நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா) உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply