இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு – WHO எச்சரிக்கை

samayam tamil இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு – WHO எச்சரிக்கை

இலங்கை உட்பட உலகளாவிய அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது.

இது குறித்து இலங்கையிலுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகம் இன்று  வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

“இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் கொரோனா திரிபு டெல்டா வைரஸின் பரவல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த வாரம் 4 மில்லியன் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமான டெட்ராஸ் அத்ஹனொம் ஜிஹெப்ரேயெஸ்ஸ் தெரிவித்துள்ளார்.

மேற்படி தொற்றுக்கு உள்ளானவர்களுள் பெரும்பாலானோர் டெல்டா கொரோனா வைரஸின் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 200 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021