பிரித்தனியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற 13 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுநாள்

318 Views

13 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சி

முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலின் 13 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நிகழ்வை முன்னெடுத்தனர்.

13 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சி

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கமைப்பில்  ஒல்ட் பிலேஷ் யாட் ல் இருந்து நீதிக்கானபேரணி ஆரம்பமாகி இல 10 டவுணிங் சாலைக்கு  முன்பாக வந்தடைந்தது. இந்த நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.  பொதுசுடரினை மூத்த செயற்பாட்டாளர் திரு. சிவலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

பிரித்தானியத் தேசிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி. பவித்திரா உதயகுமாரும் தமிழீழத் தேசிய கொடியினை  2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிவரை பயணித்த தேசியச்செயற்பாட்டாளர் திரு.தர்சன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

13 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சி

அகவணக்கத்தினை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்து வைக்கப்பட்டுருந்த நினைப்படத்திற்கான மலர்வணக்கம், சுடர்வணக்கம் பொதுமக்களால் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கப்பட்டது.

Tamil News

Leave a Reply