13வது திருத்த சட்டத்தை முழுமையாக பரவலாக்க வேண்டும்- கோவிந்தன் கருணாகரம்

21வது திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமானால் 13வது திருத்த சட்டத்திற்குள் இருக்கும் அதிகாரங்களை முழுமையாக பரவலாக்க வேண்டும் என்ற திருத்தம் 21வது திருத்த சட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,..

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலரும் 21வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்படுவதுடன் அந்த சட்ட திருத்தத்தின் குழுவில் தாங்களும் உள்ளதாக பெருமையாக சொல்லி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply