13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கும் முயற்சியில் இலங்கை: விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும்?

436 Views

13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரங்களைக் கையாளுவதற்காக, இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க இந்தியா தயாராகி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட அமைதி உடன்பாட்டுக்கு அமையவே, 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவுள்ளதாக கூறிவருகிறது.

இதையடுத்தே, இலங்கை அரசாங்கத்துடன் 13 ஆவது திருத்தச் சட்ட விவகாரங்களை கையாளுவதற்காக, இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஏற்கனவே, சவுத் புளொக்கில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருப்பதாக, தேசய என்ற சிங்கள இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் முன்னர் பணியாற்றிய மூத்த இராஜதந்திரி ஒருவரே, விசேட தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்படுகிறது.

Leave a Reply