மன்னார் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட படகுகளில் பயணித்த மீனவர்களே கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பயணித்த 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகுகளும் தலை மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.