11 பிரெஞ்சு ISIL உறுப்பினர்களை துருக்கி நாடு கடத்துகிறது

ஐ.எஸ்.ஐ.எல் இஸ்லாமிய ஆயுதக் குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 11 பிரெஞ்சு நாட்டவரை துருக்கி நாடு கடத்தியுள்ளது.திங்களன்று அன்று இடம்பெற்ற இந்த நாடுகடத்தலுடன் இதுவரை வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு ISIL உறுப்பினர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கி வெளிநாட்டு போராளிகளுக்கு “ஒரு ஹோட்டல் அல்ல” என
துருக்கிய தரப்பு தெரிவிக்கிறது.

துருக்கிய உள்துறை அமைச்சக தகவலின்படி குறைந்தது 18 சந்தேக நபர்கள் ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டவர் ஒருவரும் நாடு கடத்தப்பட்டதாக தெரிகிறது.

அத்துடன் மேலும் 1,200 வெளிநாட்டு ஐ.எஸ்.ஐ.எல் உறுப்பினர்கள் காவலில் இருப்பதாக அங்காரா கூறுகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலானவர்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப தமது நாடு திட்டமிட்டுள்ளதாக துருக்கிய உள்துறை மந்திரி சுலேமான் சோய்லு தெரிவிக்கிறார்.