பாலஸ்தீன மக்களின் நினைவு நாளில் 100 பேர் படுகொலை

இஸ்ரேலை உருவாக்கும் முயற்சியில் 1948 ஆம் ஆண்டு பாலஸ் தீனத்தில் இருந்து 750000 மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 77 ஆவது ஆண்டு நிகழ்வில் இஸ்ரேல் படையினர் காசா பகுதியில் மேற்
கொண்ட தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது.
ஹான் யூனீஸ் பகுதியில் கடந்த வியாழக்கிழமை(15) இஸ் ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 19 மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களி
னால் இதுவரையில் 51,000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட் டுள்ளதாக பலாஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளபோதும், கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை 77,000 இற்கும் அதிகம் எனவும், காயமடைந்தவர்கள் 105,000 இற்கும் அதிகம் எனவும் த எகொனமிக் ரைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற படுகொலைகளைத் தொடர்ந்து பெருமளவான மக்கள் அந்த பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று வருவ தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, காசாவில் இடம்பெறும் மனிதப் பேரவலங்களை தடுப்பதற்கு அமெரிக்கா முன்வரவேண்டும் என மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபரிடம் சவுதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேற்ஸ் ஆகிய நாடுகள் கேட்டுள்ளன.
ஆனால் காசாவை அமெரிக்கா தனது நிர்வாகத்தில் எடுத்து அதனை ஒரு சுதந்திர வளையமாக மாற்றும் திட்டம் தன்னிடம் உள்ளதாக ட்றம்ப் தெரிவித்துள்ளார்.