மன்னாரில் இருந்து படகு வழியாக மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து இன்று(06) அதிகாலை படகு வழியாக 10 பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அண்டிய மணல் தீடையில்  இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இலங்கை இந்தியா இடையே உள்ள திட்டியில் இந்தியாவின் ஆளுகையில் உள்ள 3வது மணல் தீடையில்  இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை மரைன் போலீசார் மீட்டு மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.