ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஈரானிய தூதுவர் ஹாசிம் அஷிட் இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
Immensely grateful to @IRANinSriLanka & the people of #Iran for the generous grant of $1.8m of essential medicines, including cancer drugs. H.E. Hashem Ashjazedah expressed Iran's friendship with this gift as a statement of solidarity in this difficult time. #ThankYou pic.twitter.com/hmTHaixvhC
— Keheliya Rambukwella (@Keheliya_R) May 6, 2023
இந்த நன்கொடையின் கீழ், நாட்டில் புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் இரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்துகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இவ்வாறான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வது பெரும் நிவாரணம் அளிப்பதாகவும், அதற்காக ஈரான் மக்களுக்கும் ஈரான் குடியரசிற்கும் இலங்கை பிரஜைகள் சார்பாக மிகவும் நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.