10 மில்லியன் Mink அழிப்பு – டென்மார்க் அரசிற்கு விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

287 Views

டென்மார்க் நாட்டில் Mink  என்று அழைக்கப்படும் மிருகங்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டு வருவதற்கு விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது  Mink வகை விலங்குகள். இவை சாதுவான உயிரினம்.  இவற்றின் அடர்த்தியான ரோமத்தைக் கொண்டு குளிருக்கு இதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

Caged mink on a farm in Gjoel, North Jutland, Denmark, on 9 October 2020

டென்மார்க்கில் ஃபர் தயாரிப்புத் தொழில் பிரதானம், அதற்கு  Mink-கின் பங்களிப்பு மிக மிக பிரம்மாண்டம்.  டெர்மார்க்  நாட்டின் பொருளாதாரத்துக்கே இந்த வகை உயிரினங்கள் பெரும் பங்காற்றுகின்றன.  அந் நாடு முழுவதும்  Mink பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

Denmark mink slaughter, 21 Oct 20

இந்நிலையில், டென்மார்க்கில் உள்ள  Mink விலங்குகளிடமிருந்து புதுவகை  வைரஸ் உருவாவதாகவும் இதனால் கோவிட் தடுப்பூசி தயாரிப்பில் பின்னடைவு ஏற்படும் எனவும் அந்நாட்டின் பிரதமர் மெட்ட் ஃப்ரெட்ரிக்சென் தெரிவித்தார்.

Mink culling team in Gjol, Denmark, 8 Oct 20

மேலும், டென்மார்க்கில் உள்ள 17 மில்லியன்  Mink -குகளை அழிப்பது மட்டுமே ஒரே வழி என்றும் அவர் பரிந்துரைத்தார்.

Mutant Virus in Mink Raises Doubts About the Future of Fur

இதனையடுத்து,  Mink அழிப்பு தொடங்கியுள்ளது. டெர்மார்க் ஃபர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அறிக்கையின்படி 3-ல் 2 பங்கு  Mink  உயிரினம் அழிக்கப்பட்டுவிட்டன.  Mink ஃபர் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதனை சீர் செய்ய இன்னும் மூன்றாண்டுகளாவது ஆகும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

World News | The Week - The Week10 மில்லியன் Mink அழிப்பு – டென்மார்க் அரசிற்கு விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

இந்நிலையில்,பிரதமரின் அறிவிப்புக்கும் Mink இன அழிப்புக்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

7eff4cdf7dff46c08e15eb5db5ec8633 10 மில்லியன் Mink அழிப்பு – டென்மார்க் அரசிற்கு விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

இதற்கிடையில் விஞ்ஞானிகளோ Mink குறித்த அறிவியல் அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால், இப்போதே பத்து மில்லியன் Mink -குகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply