வோஷிங்டன் மாகாணத்தில் ’தமிழ் பாரம்பரிய நாள்’

ஐக்கிய அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தின் ஆளுநர் திரு. ஜே.இன்ஸ்லி அவர்கள், மார்ச் 09ஆம் திகதியை ’தமிழ் பாரம்பரிய நாள்’ ஆக அறிவித்திருக்கிறார்.

அவரது அறிவிப்பில், “வோஷிங்டன் மாகாணத்தில், 9,000 தமிழ் மக்கள்,  வசிக்கின்றனர். அவர்களின் தனித்துவமான பூர்வீக மரபுகளை அங்கீகரிக்கும் வகையில், அவர்களின் பாரம்பரியத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

உலகின் மிகப் பழமையான மற்றும் தொன்மையான தமிழ் மொழி, அங்கீகாரம் பெற தகுதியுடையது.

தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், கனடா நாட்டின் பல பகுதிகளில் கௌரவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வோஷிங்டன் மாகாணத்தில், தமிழ் மொழியை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, இங்கு, மார்ச், 9ஆம் திகதி, ‘தமிழ் பாரம்பரிய தின’மாக கொண்டாடப்படும்.

அந்த சிறப்பான நாளன்று, மாகாண மக்கள் அனைவரும் என்னுடன் இணைந்து கொண்டாட வேண்டும் என, வேண்டுகிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.