வேகமாக பரவும் கொரோனா- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை

Covid 19 நோயாளிகள் மற்றும் தொடர்பாளர்கள் உள்ள சிவப்பு வலயத்தில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக பிரதேச முடக்கத்தினை ஏற்படுத்துதல் அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களது அறிக்கையில்

தற்போதுள்ள சூழ்நிலையில் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புபட்டவர்களினால் Covid 19  வைரஸ் பெருகி வருகின்றது
இதிலே பிரதானமாக சுகாதார கொள்ளளவை பாதுகாப்பதிலும் அந்த கொள்ளளவை அதிகரிப்பது சம்பந்தமாகவும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.

தகுந்த முறைகளால் நோயின் பரம்பலைக் கட்டுப்படுத்தி முகாமைத்துவம் செய்ய முடியாது போனால் அல்லது எங்களுடைய சுகாதார கொள்ளளவை மீறினால் முன்னைய காலத்தில்  கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தியது போல் முகாமைத்துவம் செய்ய முடியாமல் போய்விடும்.

இதிலே மூன்று பிரதான கூறுகளின் பங்களிப்பும், முடிவெடுத்தலும் இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த அத்தியாவசியமாகின்றது.

அவை,
⑴ அரசியல் தலைவர்களின் பங்களிப்பு
⑵ சுகாதாரத்துறையின் கொள்ளளவு
⑶ பொதுமக்களின் ஒத்துழைப்பு

தற்பொழுது கொரோனா வைரஸ் பரம்பலை முகாமைத்துவம் செய்யும் முகமாக இன்றுவரை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது பரிந்துரைகளை தகுந்த அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தியுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்ட விடயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

⑴ சுகாதார அமைச்சின் செயலாளரின் தலைமையில் Covid 19 இணைப்பு மத்திய நிலையத்தை ஆரம்பித்தல்

⑵ Covid 19 நோயாளர்கள் மற்றும் தொடர்பு பட்டவர்களின் பரம்பலை GPS தொழிநுட்பத்தை பயன்படுத்தி குறித்தல்

⑶ Covid 19 நோயாளிகள் மற்றும் தொடர்பாளர்கள் உள்ள சிவப்பு வலயத்தில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக பிரதேச முடக்கத்தினை ஏற்படுத்துதல் (Zonal Lockdown)

4)தொற்றுநோய் தடுப்புபிரிவின் அதிகாரி வைத்தியர். சுதத் சமரவீர பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் (DDG-) பதவியிலிருந்து விடுவித்து பதிலாக தகுந்த பணிப்பாளர் நாயகத்தை நியமிக்கும் பட்சத்தில் அவருக்கு வேலைப்பளுவை குறைத்து தெற்று நோய்த்துறையில் உரிய கவனம் செலுத்துதல்.

⑸ PCR பரிசோதனைகளை மேற்கொள்ளும் அளவினை மேலும் விரிவு படுத்தல்.

⑹ சகல வைத்தியசாலைகளையும் தொடர்புபடுத்தி சுகாதாரத்துறையின் சகல தரப்பிரிவின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைப்புகுழு ஒன்றினை உருவாக்குதல். அதன் மூலம்  பாதுகாப்பு சம்மந்தமான முடிவுகளை விரைவில் எடுக்க முடியும்.

⑺ சுகாதார சேவைகளுக்கு தேவையான தனிநபர் பாதுகாப்பு அங்கிகளை(PPE) தேவையான அளவு வழங்குவதன் மூலம் வைத்தியர் உட்பட சுகாதார ஊழியர்கள் உறுதியுடன் சேவை செய்ய அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

⑻ சுகாதார சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கும் விதத்தில், வைத்தியசாலையில் நடைபெறுகின்ற நாளாந்த நிகழ்வுகளை தற்காலிகமாக தளர்த்தி அதன் முலம் சுகாதார சேவையை வினைத்திறனாக ஆற்றுவதற்கு வழிவகுத்தல்.

⑼ சுகாதார சேவையில் உள்ளோர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு சுகாதார சேவையில் அவர்களை தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தும் முறை மற்றும் PCR பரிசோதனைகள் செய்யும் முறைகள் பற்றிய வழிமுறைகளை உருவாக்குதல்.

⑽ தனிமை படுத்தும் போதும், கொரோனா நோய்த்தொற்றை இனம் காணும் பொருட்டும் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு, சுகாதார வைத்திய அதிகாரிகளின் பொறிமுறை, இராணுவப் புலனாய்வுப்பிரிவு என்பவற்றின் சரியான செயற்பாடுகளை  உறுதிப்படுத்தல்

⑾ பொதுமக்கள் தேவையற்ற ரீதியில் நடமாடுவதை தவிர்க்கவும்.
⑿ சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வழிமுறைகளை கடைப்பிடிப்பதற்கான வழிமுறைகளையும் மற்றும் நீதிக்கட்டுப்பாடுகளையும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தல்.

⒀ முடியுமானவரையில் தனியார் மற்றும் அரச துறையில் பணியாற்றுபவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் விதத்தில் நிறுவனங்களை அறிவுறுத்தல்.

⒁ கொரோனா நோய் அறிகுறிகள் வெளிப்பட்டால் சேவை நிலையத்திற்கு வராமல் உடனடியாக வைத்திய ஆலோசனைகளைப் பெறுதல்.

⒂ கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வரை பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் என்பவற்றை பிற்போடல்.

⒃ இந்தக் காலத்தில் முன்களத்தில் சேவையாற்றுகின்ற சகல சுகாதார மற்றும் பாதுகாப்பு ஊழியர்களின் உச்ச சேவையினை உறுதிப்படுத்தும் பட்சத்தில் அவர்களின் அடிப்படை வசதிகளை உச்சநிலையில் ஏற்படுத்தி கொடுத்தல்.” என
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.