விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்ற குற்றச்சாட்டை கைவிட மலேசியா முடிவு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கு ற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிராக அனைத்து கு ற்றச்சாட்டுக்களையும் நீக்க மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்காது இருக்க பலமான காரணங்கள் இருப்பதாகவும் இவர்கள் எதிர்நோக்கும் 34 கு ற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர்களில் எவருக்கும் த ண்டனை வழங்குவதற்கான யதார்த்தமான எதிர்பார்ப்பு இல்லை எனவும் சட்டமா அதிபர் டன்ஸ்ரீ டெமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

மலேசிய சமஷ்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 145(3) ஷரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தனது விருப்பத்திற்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சந்தேக ந பர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக மலேசிய சட்டமா அதிபர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஒருவர் தனது செல்போனில் அல்லது பேஸ்புக்கில் படங்களை வைத்திருப்பது வேறு பிரதிநிதித்துவங்களை வைத்திருப்பது பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக ஆகாது.இப்படியான நடவடிக்கை கு ற்ற ந டவடிக்கை என்றால், அது சட்டத்தை இழிவுக்கு உள்ளாகும்.

இப்படியான புகைப்படங்களையோ பிரபாகரனின் புகைப்படங்களை வைத் திருப்பது, பகிர்ந்தளிப்பது, அவற்றை காட்சிப்படுத்துவதன் மூலம் இந்த 12 பேரில் ஒருவரை கூட பயங்க ரவாத செயலுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று முறைப்பாடு செய்ய முடியாது. கு ற்றவியல் த ண்டனை சட்டத்தின் 130 பீ(4) அவற்றை வெறுமனே வாதிடுதல், எதிர்ப்பு அல்லது கருத்து வேறுபாடு என்று மட்டுமே கூறுகிறது என மலேசிய சட்டமா அதிபர் டான்ஸ்ரீ டெமி தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.