விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து முடிவெடுக்க 90 நாட்கள் அவகாசம்

விடுதலைப்புலிகள் மீதான தடையை பிரித்தானிய அரசு சட்டத்திற்கு முரணாக நீடித்துவருவதாக பிரித்தானிய நீதிமன்றம் முன்னர் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பை இன்று (18) பிரித்தானிய நீதிமன்றம் வழங்கியுள்ளது.

விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு சட்டத்திற்கு முரணானது என்பதால், அந்த தடை நீக்கப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசு வழக்கறிஞர்கள் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பில் பிரித்தானிய உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். அதற்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.