விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழு உறுப்பினர்கள், மாவீரர்கள், பெற்றோர்கள், உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் காணியின் பெரும்பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில்,குறித்த துயிலுமில்ல காணிக்கு முன்பாக கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.



