வாழ் நாள் வேதனம்;ஏமாற்றிய அரசாங்கம் – வலுவிழந்த படையினர்

வாழ் நாள் முழுவதும் வேதனம் பெற்றுத் தருவதாக வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் மீறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசேட தேவையுடைய மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தற்போது கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை முப்படையினர், விசேட தேவையுடைய பொலிஸார், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உறவினர்களினால் கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்களுக்கு மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதி அளித்ததாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் குறித்த இடத்தில் இருந்து வௌியேற போவதில்லை என ஜனாதிபதிக்கு மற்றும் பிரதமருக்கு குறிப்பாணை ஒன்றை கையளித்ததாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.