வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை முக்கிய அறிவித்தல்!

வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படை கலங்களான  P475, P481 ஆகிய  கலங்களில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

IMG 20250121 WA0048 வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை முக்கிய அறிவித்தல்!

இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.