ரஸ்ய கடற்படை தளம் மீது தாக்குதல் – கப்பல் சேதம்

ரஸ்ய கடற்படையின் கிரைமியா வில் உள்ள கருங்கடல் பகுதி கடற்படை பிரிவில் அங்கம் வகித்தடி மிகப்பெரும் ரொபுச்சா வகை தரையிறங்கு கலமான நொவொ செகஸ்க் பி.டி.கே 46 என்ற கப்பல் பொடோசியா பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி தேசமடைந்துள்ளதாக ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று(26) தெரிவித்துள்ளது.

வெளியாகிய காணொளிகiளின் அடிப்படையில் வெடிப்பதிர்வைத் தொடர்ந்து அங்கு மிகப்பெரும் தீ ஏற்பட்டு சுவாலைவிட்டு எரிவது அவதானிக்கப்பட்டுள்ளது.

300 தொடக்கம் 500 கி.மீ தூரவீச்சுக்கொண்ட பிரித்தானியாவின் ஸரேம் சடோ ஏவுகணை மற்றும் ஜேர்மனின் SCALP-EG ஆகிய ஏவுகணைகளை தாங்கிச் சென்ற உக்ரைனின் இரண்டு எஸ்.யூ-24 ரக விமானங்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

ரஸ்யாவின் பாதுகாப்பு வியூகங்களை கடந்து சென்ற இந்த விமானங்கள் ஏவுகணைகளை ஏவியபோதும். விமானங்கள் திரும்பியபோது நிகலோவ் நகரில் இருந்து 125 கி.மீ தொலைவில் வைத்து ரஸ்யாவின் வான்பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுனின்றது.