ரஷ்யாவிடம் இராணுவ உபகரணங்களை வாங்க இலங்கை முயற்சி; பட்டியலையும் சமர்ப்பித்தது

ரஷ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை அதற்கான பட்டியலொன்றையும் சமர்ப்பித்துள்ளது.

மொஸ்கோவிற்கான இலங்கை தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை புதிய ஆயுத தளபாடங்களை விரைவில் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்களுக்கு தேவையான ஆயுததளபாடங்கள் குறித்த பட்டியலொன்றை வைத்துள்ளளோம். அவற்றை குறுகிய காலத்துக்குள் பெற விரும்புகின்றோம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய உடன்படிக்கையொன்று தற்போதும் நடைமுறையில் உள்ளது அது முடிவடைந்ததும் ரஷ்யாவுடன் புதிய உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவோம் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னெடுத்துள்ள ஐக்கியநாடுகள் சமாதானப்பணிகளுக்கு சாதனங்கள் தேவைப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.